சென்னை தலைமைச் செயலகத்தில் பலமாக காற்று வீசியதால் கிழிந்த தேசியக்கொடி உடனடியாக மாற்றப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேசிய கொடி சேதம் அடைந்துள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாண்டஸ் சென்னையை நோக்கி நெருங்கி வருவதால் சூறாவளி காற்று வீசுகிறது. வேகமாக வீசக்கூடிய காற்றின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்வது, மின்சார கம்பங்கள் சாய்ந்து விழுவது, வீடுகள் நொறுங்கி விழுவது என ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இருக்கக்கூடிய தலைமை அரசினுடைய தலைமை செயலகத்தில் ஏற்றப்பட்டுள்ள மூவர்ணக் கொடி மழையாலும், காற்றாலும் பாதிக்கப்பட்டு தற்போது பச்சை நிறப்பகுதி கிழிந்து சேதமடைந்துள்ளது. இது அதிகாரியின் உடைய கவனத்திற்கு தற்போது வந்துள்ளது.
எனவே அதனை உடனடியாக கீழே இறக்கி தேசியக்கொடியின் உடைய அந்த மாண்பு காக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பலமாக காற்று வீசியதால் கிழிந்த தேசியக்கொடி உடனடியாக கீழிறக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது.