தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் அதிக தடுப்பூசி செலுத்திய நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் வகிக்கிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் இதுவரை 9.17 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர், சென்னையில் 94.19% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 21 மாநகராட்சியில் 100 சதவிகித தடுப்பூசி செலுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.