Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை தினம் எதிரொலி!…. பழமையான சைக்கிள் கண்காட்சி…. ஓடோடி வந்த பார்வையாளர்கள்….!!!!!

சென்னை தினத்தை முன்னிட்டு நகரில் பல்வேறு கண்காட்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , சைக்கிள்களின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் அடிப்படையில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை மற்றும் சைக்கிளிங் யோகிஸ் அமைப்பு சார்பாக சென்னை தீவுத்திடலில் சைக்கிள் கண்காட்சி நடைபெற்றது. இதை சுற்றுலா, இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன் துவங்கி வைத்தார். இதில் சுற்றுலாத் துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தொழிலதிபர் எண்ணாரசு கருணேசன் போன்றோர் பங்கேற்றனர்.

இந்த கண்காட்சியில் 2ம் உலகப்போரில் (1939-1945) விமானப் படை வீரர்கள் பயன்படுத்திய மடக்கும் வடிவிலான “பி.ஏஸ்.ஏ” ரக சைக்கிள், இங்கிலாந்தில் 1897 ஆம் வருடத்தில் பிரபலமான “பியர்ஸ்” ரக சைக்கிள் இடம்பெற்றிருந்தது. கரடுமுரடான சாலைகளை எளிதாக கடக்கும் அடிப்படையிலான இந்த ரக சைக்கிள்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையில் இந்த சைக்கிள்களை பார்வையிட்ட பார்வையாளர்கள் அதன் முன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

அத்துடன் சைக்கிள்களின் வரலாறு தொடர்பாக அதன் பராமரிப்பாளர்களிடம் கேட்டறிந்து “ஓல்டு இஸ் கோல்டு” என வியந்தனர். இக்கண்காட்சியில் பெரியவர்கள் பயன்படுத்திய சைக்கிள்கள் மட்டுமல்லாது குழந்தைகள் பயன்படுத்திய வித விதமான 3 சக்கர சைக்கிள்களும் இடம்பெற்றிருந்தது. இது தவிர்த்து சைக்கிள்களில் இடம்பெற்றிருந்த டைனமோக்கள், மண்எண்ணெய் விளக்குகள், பேட்டரியில் இயங்கும் விளக்குகள், நிறமாறும் ஒளிவிளக்குகள், காற்றடிக்கும் பம்புகள், கையடக்க பழுது பார்க்கும் சாதனங்களும் கண்காட்சியை அலங்கரித்தது.

Categories

Tech |