ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை தினத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் பேசன் நகர் எலியட்ஸ் கடற்கரையை ஒட்டி உள்ள சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இதில் பங்கேற்க பொது மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள.து இந்த இரண்டு தினங்களிலும் மாலை 3:30 மணி முதல் இரவு 11:30 மணி வரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று சென்னையில் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடும் விழாவை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.