மெட்ராஸ் என்பதிலிருந்து சென்னை என 1996 ஆம் வருடம் பெயர் மாற்றப்பட்டாலும் இந்த நகரின் தொடக்கம் என்பது 383 வருடங்களுக்கு முந்தையது. வணிகத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி 1639 ஆம் வருடம் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்ன பட்டினத்தை விலைக்கு வாங்கியுள்ளது. அன்று முதல் மதராசபட்டினம் எனவும் சென்னப்பட்டினம் எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்தியா விடுதலை அடைந்ததும் மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டது. அதன் பின் 1969 ஆம் வருடம் முதல்வராக அண்ணா இருந்தபோது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த 1996 ஆம் வருடம் ஜூலை 17ஆம் தேதி சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை உருவானது என்று சிறப்பிக்கும் வகையில் 2004 ஆம் வருடம் முதல் வருடம் தோறும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக மாநகராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை தோன்றிய நாளில் தான் ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையும் உருவாகியுள்ளது. 1639 ஆம் வருடம் தான் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய முதல் கோட்டை சென்னை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டை தான். வெறுமனே கிடந்த இந்த பகுதியில் கோட்டை கட்டப்பட்டதனால் புதிய குடியேற்றங்களும் வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் அங்கு தான் நிர்வாகம் நடைபெற்றுள்ளது. தமிழக அரசு நிர்வாகம் வரலாற்று சிறப்புமிக்க ஜார்ஜ் கோட்டையில் தான் செயல்பட்டு வருகின்றது.
சென்னையில் மருத்துவமனை துறை அப்போதிலிருந்து சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறது. இதற்கு உதாரணமாக இங்குள்ள மருத்துவமனைகளை சொல்லலாம். அதாவது ராஜீவ் காந்தி மருத்துவமனை 1664 ஆம் வருடமும், ராயப்பேட்டை மருத்துவமனை 1911 ஆம் வருடமும், ஸ்டாண்லி மருத்துவமனை 1938 ஆம் வருடமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு 100 வருடங்களுக்கு முன்பாகவே நீதிமன்றங்கள் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் நிறுவியது. அப்படி நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்றாக சென்னை உயர்நீதிமன்றம் திகழ்கிறது தொடக்கத்தில் சுப்ரீம் கோர்ட் ஆப் மெட்ராஸ் என அழைக்கப்பட்டது. அதன் பின் உயர் நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு 1862 ஆம் வருடம் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் மெட்ராஸ் ஹைகோர்ட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விக்டோரியா ஹால் என்பது சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒரு கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்திற்கு விக்டோரியா மகாராணியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் நினைவாக கட்டப்பட்ட இந்த கட்டிடடம் பிரிட்டிஷ் கட்டிடக்கலையில் சென்னையில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக திகழ்கிறது.
ராஜாஜி மண்டபம் என்பது சென்னையில் அமைந்துள்ள பொது மண்டபம் ஆகும் முன்னதாக இது விருந்து மண்டபம் என அழைக்கப்பட்டது. நான்காம் ஆங்கிலேய மைசூர் பேரில் திப்பு சுல்தான் ஆங்கிலேயர் வெற்றி பெற்ற நினைவாக பொறியாளர் ஜான் கோல்ட்யங்கமால் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாகும். ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் சென்னை நகரில் மிகப் பழமையான கட்டிடங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இதுவே இந்திய துணைக்கண்டத்தில் மிக பழமையான ரயில் நிலையம் ஆகும். இதனை அடுத்து ஆர்மீனிய தேவாலயம் 1712 ஆம் வருடம் கட்டப்பட்டது. 1772 ஆம் வருடத்தில் பூனரமைக்கப்பட்டுள்ளது. முதலில் கட்டப்பட்ட தேவாலயம் மரத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் அன்னை மரியா இயேசுவே சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் உருவம் இருக்கிறது. மேலும் பெல்ஃபிரி என அழைக்கப்படும் மணி கோபுரத்தில் மூன்று வரிசைகளில் ஆறு மணிகள் இருக்கிறது மணிகள் ஒவ்வொன்றும் சுமார் 150 கிலோ எடை கொண்டுள்ளது.