Categories
மாநில செய்திகள்

“சென்னை தின விழா” சிறப்பாக நடைபெறும் கலை நிகழ்ச்சிகள்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!

சென்னை தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தின விழா வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் நட்பு, வணிகம், கொண்டாட்டம் என்ற தலைப்புகளில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் நந்தனத்தில் உள்ள ஆண்கள் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழா நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் தினம் தோறும் பரதநாட்டியம், மல்லம், களரி அடிமுறை, கச்சேரி, இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பாரம்பரியமான நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த திருவிழாவில் நடைபெறும் வணிக கண்காட்சியில் சிறு, குறு வணிகர்கள் தாங்கள் சந்தைப்படுத்த விரும்பும் பொருட்களை சந்தைப்படுத்திக் கொள்ளலாம். இதனையடுத்து பல்வேறு விதமான நொறுக்கு தீனிகள், திணை உணவு பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்களை சாப்பிடுவதற்கான வாய்ப்புகளும் மக்களுக்கு கிடைக்கும். மேலும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 100 வகையான மூலிகை செடிகளும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளும் வழங்கப்படும்.

Categories

Tech |