Categories
தேசிய செய்திகள்

சென்னை – திருப்பதி இடையே மீண்டும்?…. ரெயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான தகவல்….!!!!

சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி இடையே சாதாரண கட்டண பயணியர் ரயில் உள்ளிட்ட மூன்று ரயில்களின் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ள நிலையிலும் இன்னும் சில குறுகிய தூர ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் இயக்கப்படாமல் இருக்கின்றது.

அதிலும் குறிப்பாக சென்ட்ரல் மற்றும் திருப்பதி இடையே காலை 9.50 மணிக்கு இயக்கப்பட்ட சாதாரண கட்டண பயணியர் ரயில் இன்னும் இயக்கப்படவில்லை. இந்த ரயில் திருப்பதி செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதனைப் போலவே சென்ட்ரல் மற்றும் திருவள்ளூர் இடையே இரவு 11.50 மணிக்கான ரயில் சேவை மற்றும் சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே மதியம் 1.10 மணிக்கு இயங்கும் ரயில் சேவையும் இயக்கப்படவில்லை. அதனால் போதிய ரயில் சேவை கிடைக்காமல் பயணிகள் அவதிப்படுகின்றன.

எனவே பயணிகளின் அத்தியாவசிய தேவையை கருதி மேற்கண்ட ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த கோரிக்கையை ஏற்று மீண்டும் சாதாரண கட்டண ரயில் சேவை இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |