Categories
தேசிய செய்திகள்

சென்னை- திருப்பதி நெடுஞ் சாலையை விரிவாக்கம் செய்ய திட்டம்…!! விரைவில் பணிகள் துவக்கம்…!!

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கவனத்தில் கொண்டு இந்த சாலையை மேலும் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.

சென்னை பாடி முதல் திருப்பாச்சூர் வரை உள்ள இந்த நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து திருவள்ளூர் புறவழிச்சாலை வரை மேம்படுத்த நெடுஞ்சாலை துறை முடிவெடுத்துள்ளது. தற்போது முதல்கட்டமாக இந்த சாலையை விரிவாக்கம் செய்ய 360 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணிகளை ஆரம்பிக்க ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும் வேலையை நெடுஞ்சாலைத்துறை துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |