நிவர் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் நாளை காரைக்கால், மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும். 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்குதல் மரங்கள் முறிந்து மின்தடை போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.