சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (17.12.2022) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 9ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பாட வேலையை பின்பற்றி முழு வேலை நாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேபோல மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் 2ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.