சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் சௌமியா என்பவர் வசித்து வருகிறார். இவர் கத்திப்பாராவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மீரா என்ற பெண் செல்போனில் சத்தமாக பேசி உள்ளார். அப்போது சௌமியா மீராவிடம் “நாம் நட்சத்திர ஹோட்டலில் இருப்பதால் மது அருந்தும் போது கொஞ்சம் மெதுவாக பேசுங்கள் என்று கூறியுள்ளார்.”
இதையடுத்து பாரில் அனைவரும் முன்பு சௌமியா கூறியது மதுபோதையில் இருந்த மீராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு மீரா கடுமையான வார்த்தைகளால் சௌமியாவை திட்டியதால் ஆத்திரமடைந்த சௌமியா மீராவை பதிலுக்கு தவறாக பேசி உள்ளார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பில் தொடங்கி சரமாரியாக தாக்கி கொண்டனர்.
அங்கிருந்த ஊழியர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்ற போது அவர்களால் முடியவில்லை. இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் பரங்கிமலை போலீசார்க்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சண்டையில் ஈடுபட்டிருந்த 2 பெண்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.