Categories
மாநில செய்திகள்

சென்னை நேப்பியர் பாலத்தில் செஸ் தீம்….. செல்பி எடுக்க குவியும் பொதுமக்கள்…..!!!!

44வது செஸ் ஒலிம்பியர் போட்டியை முன்னிட்டு நேப்பியர் பாலம் முழுவதும் செஸ்ட் தீம்மில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றன.

போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலை நிகழ்ச்சி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் பிரதான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் முழுவதும் செஸ்ட் தீம்மில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. செஸ் போர்டுகளில் இடம்பெறக்கூடிய கருப்பு வெள்ளை நிறங்களில் கண் கவர் ஓவியத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இதனால் அந்த பாலம் வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் இங்கு வந்து செல்பி எடுத்து செல்கின்றனர்.

Categories

Tech |