சென்னையை அடுத்துள்ள மணலியில் டாக்டர் சிவந்திஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவிகளுக்கு இடையே ஒரு தலைமையை நிர்ணயம் செய்ய மற்றும் தேர்தல், ஓட்டுரிமை பற்றி பள்ளி பருவத்திலேயே அவர்கள் தெரிந்துகொள்ள வசதியாக “பள்ளி தேர்தல் திருவிழாவானது” நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கே.சந்திரமோகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியையான ஜெகஜோதி முன்னிலை வகித்தார். இதையடுத்து நாடார் உறவின் முறை மூத்த உறுப்பினர் சவுந்திரபாண்டி தேசியகொடி ஏற்றினார்.
சமத்துவம் மக்கள் கட்சி மாவட்ட செயலாளரான மணலி பாலா, பள்ளிக் கொடியை ஏற்றினார். அதன்பின் மாணவிகளுக்கான தேர்தலை தொழிலதிபர் ஆறுமுகசாமி துவங்கி வைத்தார். பின் வகுப்புகளுக்கான தலைவி மற்றும் பள்ளி முழுவதற்குமான தலைவி என தனித்தனியாக தேர்தல் நடந்தது. இதற்குரிய வேட்பு மனுதாக்கல் 3 தினங்களுக்கு முன் நடைபெற்றது. அந்த வகையில் வகுப்பு தலைவி மற்றும் பள்ளி முழுவதற்குமான தலைவி பதவியில் போட்டியிட விரும்புவோர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
அதனை தொடந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பொது தேர்தல் போன்றே தனித்தனியாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. மாணவிகள் வரிசையில் நின்று வாக்கு சீட்டு வாயிலாக வாக்களித்தனர். ஓட்டுபோட்ட மாணவிகளின் கைவிரலில் அடையாள மை வைக்கப்பட்டது. அதன்பின் மாணவிகள் அளித்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் உடனே அறிவிக்கப்பட்டது. தங்களது பள்ளி மற்றும் வகுப்பு தலைவியை ஓட்டுப் போட்டு தேர்வு செய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக மாணவிகள் கூறினர். இத்தேர்தல் திருவிழாவில் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.