சென்னையில் பாரி முனையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை பாரி முனையில் உள்ள ரத்தன் பஜார், பிரேசர் பிரிட்ஜ் சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 400 கடைகளில் 130 கடைகள் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இருந்த போதிலும் கடைகளில் இருந்து வாடகை வரவில்லை என்பதால் நிலுவைத் தொகையாக 13வது கடைகளில் இருந்து மட்டும் 40 லட்சம் ரூபாய் வர வேண்டியுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அந்த 130 கடைகளுக்கும் சீல் வைத்தனர். வாடகையை வரைவோலையாக சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் செலுத்தும் பட்சத்தில் சீல் அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளனர்.