Categories
மாநில செய்திகள்

“சென்னை பிரபல மாலில் நடைபெற்ற மது விருந்து பார்ட்டி”….. இளைஞர் மர்ம மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

சென்னை வீ.ஆர் மாலில் நடைபெற்ற மது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள வீ.ஆர் மாலில் நேற்று இரவு மது விருந்து பார்ட்டி நடைபெற்றது. இந்த விருந்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அதில் மடிப்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் பிரவீன் அதிக அளவு மது மற்றும் போதை மாத்திரைகளை உட்கொண்ட காரணத்தினால் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று பலியாகினர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த மாலில் அனுமதியின்றி மது விருந்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த விக்னேஷ், சின்னதுரை, மார்க் பாரத் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |