சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 40 மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து சென்னையில் மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களில் ஊழியர்களுக்காக முதற்கட்டமாக 150 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.
பின்னர் இந்த சிறப்பு ரயில்களில் எண்ணிக்கை 104 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் கூடுதலாக 40 சிறப்பு மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கூடுதல் ரயில்களை இயக்க திட்டமிட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.