Categories
மாநில செய்திகள்

சென்னை புறநகர் ரயில் சேவையில்…. இன்று முதல் 2 நாட்களுக்கு….. தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு….!!!!

அரக்கோணம் யார்டில் மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மூர் மார்கெட் -அரக்கோணம் காலை 8.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் கடம்பத்தூர் -அரக்கோணம் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது. அதனைப்போலவே மூர் மார்க்கெட்டில் இருந்து காலை 9.10 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில் திருவள்ளூர் -அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மூர் மார்க்கெட்டில் இருந்து காலை 9.50 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் கடம்பாத்தூர் மற்றும் அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது. மூர் மார்க்கெட்டில் இருந்து காலை 10 மணிக்கு திருத்தணி செல்லும் ரயில் திருவள்ளூர் மற்றும் திருத்தணி இடையே ரத்து செய்யப்படுகிறது.மூர் மார்க்கெட்டில் காலை 11 மணிக்கு அரக்கோணம் புறப்படும் ரயில் கடம்பத்தூர் மற்றும் அரக்கோணம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் மே 31ஆம் தேதி மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் வசதிக்காக சில சிறப்பு ரயில்கள் கடம்பத்தூர் -மூர் மார்க்கெட், திருவள்ளூர்,கடம்பத்தூர் மற்றும் அரக்கோணம் இடையே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |