Categories
மாநில செய்திகள்

சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

நாடு முழுதும் ரயில் போக்குவரத்து சேவையானது பயணிகளுக்கு மிக குறைந்த விலையை அளித்து வருகிறது. இதில் ஏராளமானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் அலுவலகம், பள்ளி, கல்லூரி உட்பட பல்வேறு இடங்களுக்கு செல்ல தினசரி லட்சக்கணக்கான நபர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் கொரோனா காலத்தில் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே நடைமுறைப்படுத்தியது. அதிலும் குறிப்பாக பயணிகள் 2 டோஸ் தடுப்பூசியை கட்டாயமாக போட்டிருக்க வேண்டும்.

மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பணியாளர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் பயணிகளுக்கு அமல்படுத்தப்பட்டது. இப்போது நாடு முழுதும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் தெற்கு ரயில்வேயானது கடந்த மாதம் முதல் அமல்படுத்திய கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. எனினும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து ரயில் சேவையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக போக்குவரத்து சேவையில் மாற்றம் தொடர்பாக தெற்கு ரயில்வேயானது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை கடற்கரை -தாம்பரம் இடையே இரவு 11.59 மணி மற்றும் தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் வரும் 19ஆம் தேதி மற்றும் 20ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. அத்துடன் மூர்மார்க்கெட் -சூலூர்பேட்டை இடையே காலை 10.10 மணி மற்றும் 12.40 மணிக்கு கடற்கரை – சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று மதியம் 1:20 மணிக்கு சூலூர்பேட்டை-மூர்மார்கெட் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டது.

Categories

Tech |