சென்னை போலீஸ் கமிஷனர் முன்னிலையில் 1 1/2 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது.
பல போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் கஞ்சா உள்பட போதை பொருட்களை விசாரணை முடிந்த பின் எரித்து அழிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை போலீசார் பெற்றுள்ளார்கள். அந்த வகையில் சென்ற ஜூன் மாதம் 25ஆம் தேதி 68 வழக்குகளில் சிக்கிய 2 கோடி மதிப்பிலான 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகர், 1300 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ரசாயன பொருட்களை எரிக்கும் மையத்தில் வைத்து அளிக்கப்பட்டது.
இந்நிலையில் 57 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 231 கிலோ கஞ்சா, 14.83 கிலோ கெட்டமைன் என ஒன்றரை கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் முன்னிலையில் அளிக்கப்பட்டது.