Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. வேற லெவலில் மாறப்போகுது கீழம்பாக்கம்…. இதோ நீங்களே பாருங்க….!!!!

சென்னையில் தினந்தோறும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நகருக்கு வெளியே பேருந்து நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டது. அதன்படி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுமையை குறைக்கும் வகையில் ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. அதற்கான திட்டம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு முதல்வர் பொறுப்பிலிருந்த எடப்பாடி பழனிச்சாமி அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு குறைவு காரணமாக பணிகள் தோல்வி அடைந்தன. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் மாதம் முழுமையாக நிறைவு பெற்று கீழம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேருந்து நிலையம் மொத்தம் 88.52 ஏக்கரில் அமைகின்றது.

அதில் 215 பேருந்து நிறுத்துமிடங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் அரசு பேருந்துகளுக்கு 130, ஆம்னி பேருந்துகளுக்கு 85 என பிரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் பேருந்துகள் நிறுத்தி வைக்கும் வகையில் 3.95 ஏக்கர் பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பார்க்கிங் வசதி, கார்கள், இருசக்கர வாகனங்களை கூட அதில் நிறுத்த முடியும். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி,கும்பகோணம் மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் கீழம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

அதுமட்டுமல்லாமல் சென்னை மாநகருக்குள் செல்லும் வகையில் நகரப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் அடுத்த கோயம்பேடு என்ற பெருமையைப் பெறும். இது சென்னையின் புதிய அடையாளங்களில் ஒன்றாக மாறிவிடும். அதுமட்டுமல்லாமல் கீரம்பாக்கம் பேருந்து நிலையம் வர உள்ளதை ஒட்டி சென்னை மெட்ரோ ரயிலின் ப்ளூ லைன் வழித்தடத்தை விமான நிலையத்திலிருந்து கீழம்பாக்கம் வரை நீட்டிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலமாக கீழம்பாக்கத்திற்கு பிரம்மாண்டமான பேருந்து நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் வசதி கிடைக்கும். அதனால் இந்தப் பகுதியில் அதிகம் குடியேற பொதுமக்கள் திட்டமிடுவார்கள். இதனையொட்டி கட்டுமானங்களும் அதிகரிக்கும். குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் என ஏராளமான வசதிகள் கேளம்பாக்கத்தில் கொண்டு வரப்படும். இட வசதிகள் இருக்கும் பட்சத்தில் தொழிற்சாலைகள் மற்றும் ஐடி நிறுவனங்கள் போன்றவை கூட அமைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

அதனால் இப்பகுதியில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயரும் பட்சத்தில் சில ஆண்டுகளுக்கு ரியல் எஸ்டேட் தொழில் களை கட்டும். அங்கு நிலம் வைத்திருப்பவர்களை கோடீஸ்வரர்கள் என்று கூட அழைக்கலாம். இந்த நிலையில் அடுத்த சில வருடங்களில் கீழம்பாக்கம் பகுதி மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடையக்கூடும்.

Categories

Tech |