Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு இன்று முதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக  அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி ஆர்டர்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி ஆர்டர்களின் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் குறித்த தகவல்கள் http://covid19.chennaicorporation.gov.in/covid/groceries என்ற இணையதளம் மற்றும் நம்ம சென்னை செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அங்காடி பெயர், தொலைபேசி எண், வார்டு, அந்தப் பகுதியிலுள்ள கடை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இதில் அறியலாம்.

Categories

Tech |