தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை கடந்த 4 நாட்களாக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.இதனைத் தொடர்ந்து மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதும்,உணவுப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளுமாறு சென்னை மாநகர ஆணையர் சுகன்தீப் சிங் பேட்டி அளித்துள்ளார்.மேலும் மழை நீர் அதிகமாக தேங்கும் நாற்பத்தி ஒரு இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு மீட்பு படகுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.