இந்த ஏழு வகை மீன்களை சாப்பிட்டால் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
சென்னை பட்டினப்பாக்கம் மீன் சந்தையில் விற்கப்படும் ஏழு வகை மீன்களின் தசைகளில் ஆபத்து விளைவிக்கக்கூடிய நின் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. அதிலும் சீலா, கானாங்கெளுத்தி, கிழங்கா உள்ளிட்ட 7 வகை மீன்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாம் கோழி ஆடு போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை பதிலாக ஆரோக்கியமாக இருக்கும் மீன்களை சாப்பிட்டால் உடம்பிற்கு மிகவும் நல்லது என கருதி மீன் வகை உணவுகளை சாப்பிட்டு வந்தோம்.
ஆனால் தற்போது சென்னையில் அருகே பிடிக்கப்படும் சில வகை மீன்களில் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய துகள்கள் உள்ளதாக பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் நடத்திய ஆய்வில் வெளியாகியுள்ளது. கானாங்கெளுத்தி, கிழங்கா, சங்கரா, சிவப்பு பால் சுறா உள்ளிட்ட 7 மீன்களின் தசைகளில் இந்த வகை துகள்கள் இருப்பதாக கடல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதை சாப்பிடும்போது தைராய்டு சுரப்பி பாதிக்கப்படுவதுடன் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிறு பிளாஸ்டிக் கழிவுகள் கடல் நீரில் கலந்து இருக்கும் நிலையில் அதனை இரையாக உண்ணும் மீன்கள் வயிற்றில் சிக்கி அதை வெளியேறினாலும் கூட 5 மில்லி மீட்டர் அளவுள்ள துகள்கள் மீனின் ரத்தத்தில் கலந்து தசைகளில் தங்கிவிடும். அப்படி இருக்கும் பொழுது அதனை நாம் உண்ணும்போது நம் உடலுக்குள் சென்று அது மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்குவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.