சென்னையில் ஆறு, ஏரிகளில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நீர்நிலைகள் மற்றும் நீர் வழித் தடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது. பெருங்குடி ஏரி மற்றும் அதனைச் சுற்றிலும் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டிய 21 பேருக்கு 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி கூறியுள்ளது. அதனால் பொதுமக்கள் யாரும் இனி குப்பைகளை ஆறு, ஏரிகளில் கொட்டக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Categories