இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு வீடுகளில் குப்பைகளை பிரித்து பிரித்து தான் வாங்கப்படுகிறது. மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என குப்பைகள் தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்கள் தினம்தோறும் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். ஆனால் பல இடங்களில் இவை பிரிக்கப்படாமல் இருப்பதால் அவர்களின் பணி சிரமத்திற்கு உள்ளாகிறது.
இந்த நிலையில் சென்னையில் குப்பைகளை தரம்பிரித்து தராவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. தனி இல்லங்களுக்கு 100 ரூபாய் வீதமும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஆயிரம் ரூபாய் வீதமும் அபராதம், பெருமளவு குப்பை உருவாகுபவர்களுக்கு ஒரு ரூபாய் 5000 அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இனி குப்பைகளை தரம் பிரித்து தர வேண்டும். அப்படித் தராவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.