சென்னை குடிநீர் வாரியமானது செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை (நாளை) மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு வரி செலுத்த வசதியாக இன்றும், நாளையும் 200 வார்டில் உள்ள பணிமனை வசூல் மையங்கள், இரவு 8:00 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நுார்வோர் வரி மற்றும் கட்டணத்தை செலுத்தவேண்டி கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Categories