Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….! இன்று இரவு சீனிவாச திருக்கல்யாணம்…. மிஸ் பண்ணாம போய் பாருங்க…..!!!

சென்னை தீவுத் திடலில் சீனிவாச திருக்கல்யாணம் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாலை 4 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்காக திருமலை திருப்பதியில் இருந்து உற்சவர் சிலைக்கும், 40 பட்டாச்சாரியார்களும், 100 வேத பண்டிதர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பங்கேற்கிறார். விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு திருப்பதி லட்டு மற்றும் ஆப்பிள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |