தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை கற்று வருகிறார்கள். சிலர் வீட்டில் இருந்தவாரே அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர். அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மின் தடை செய்யப்படாமல் இருந்தது.
ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக மின்வாரிய பராமரிப்புக்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் மதுரவாயில் பகுதி, ஏ.எம்.எம்.டி ஏ காலனி, வரலட்சுமி நகர், கங்காநகர், கிருஷ்ணா நகர், தனலட்சுமி நகர், ராஜீவ் காந்தி நகர், கணபதி நகர், ஐயப்பன் நகர், பாலமுருகன் நகர், ராஜராஜன் நகர், வானகரம் மேட்டுகுப்பம் பகுதி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை இன்று மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.