தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் சென்னையில் இன்று முகாம்கள் கிடையாது எனவும் தடுப்பூசி முகாம்கள் மீண்டும் தொடங்குவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் யாரும் இன்று தடுப்பூசி முகாம்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.