Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே! இன்று நடக்காது, யாரும் போகாதீங்க -அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இருப்பினும்  தடுப்புசி பற்றாக்குறையின் காரணமாக தமிழகம், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி போட தமிழக மக்கள் தயாராக இருக்கும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இன்று நடைபெற இருந்த தடுப்பூசி முகாம்கள் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக ரத்து செய்யப்படுவதாகவும், தடுப்பூசி வந்த பிறகு தேதி அறிவிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Categories

Tech |