சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில்இன்று பொது விநியோகத் திட்டத்தின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ரேஷன் அட்டை தாரர்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரேஷன் கடைகளில் பொருள் வாங்குவதற்கு நேரில் வரமுடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டவர்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும். மேலும் ரேஷன் கடை குறித்து ஏதேனும் புகார் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.