சென்னையில் சொத்து வரி பொது சீர் ஆய்வு அறிவிப்புகள் தபால் துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரி சரிபார்க்கப்பட்டு வருகின்றது. சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி சீராய்வின் நிர்ணயிக்கப்பட்ட வரியை கணக்கிட்டு அறிய ஏதுவாக ஏற்கனவே மாநகராட்சியின் https://erp.chennaicorporation.gov.in/ptis/citizen/revisionNoticeOne!generateReport.action என்ற இணையதள இணைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதில் சொத்து வரி எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் ஆகிய விவரங்களை பதிவு செய்து கணக்கீட்டு விவரத்தை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து தற்போது குறிப்பிட்ட தெருவுக்கு சதுர அடி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரி விவரம் அறிவதற்கு மாநகராட்சியின் https://erp.chennaicorporation.gov.in/ptis/citizen/citizenCalc.action என்ற இணையதள இணைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.சொத்து வரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரி தொடர்பாக எழும் சந்தேகங்கள் மற்றும் கணக்கீட்டு விவரம் குறித்து தெளிவு பெறுவதற்கு மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மாநகராட்சி இணையதளம் மற்றும் செல்போன் செயலை மூலமாக சொத்துவரி செலுத்தும் போது ஏதாவது குறைபாடுகள் இருந்தால் வரி செலுத்துவோர் மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.