தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து உள்ளது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி திரும்பியுள்ளனர். இதனால் கொரோனா முடிந்துவிட்டதாக நினைத்து பொது இடங்களுக்கு அவர்கள் செல்லும் பொழுது முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் அலட்சியமாக இருக்கின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் பொது இடங்களில் மக்கள் கூடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மக்களின் அலட்சியத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.