Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உடனே கிளம்புங்க….. இன்று (செப்.18) 2000 இடங்களில்….. மெகா தடுப்பூசி முகாம்….!!!!!

சென்னையில் இன்று 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது : “சென்னை மாநகராட்சியில் நாளை 37 வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.  இந்த முகாமிற்கு ஒரு வார்டுக்கு 10 முகாம் என்ற கணக்கில் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.  முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

தற்போது 75 நாட்களுக்கு அதாவது வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு ஆறு மாதம் ஆன நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள். அவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. வருகிற செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியானது இலவசமாக செலுத்தப்படும். செப்டம்பர் மாதம் முடிய இன்னும் 14 நாட்கள் உள்ள நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி” அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |