தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் மக்களின் நலனை கருதி முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.அவ்வகையில் இன்று சென்னையில் உள்ள 200 வார்டுகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழைக்கால நோய்கள் வருவதை தடுப்பதற்கு இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.