தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை மாநகர போலீசார் சார்பில் கொரோனா ஊரடங்கும் நேரம் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையிலான உதவி மையத்தை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இ பதிவு, மூத்த குடிமக்கள் மற்றும் அவசர தேவைகள் குறித்து 94981882239, 94981881236 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்கலாம்.