Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே உஷாரா இருங்க…. சற்றுமுன் வெளியான அதிர்ச்சித் தகவல்…..!!!!

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்றுமற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இருந்தாலும் அந்தக் கட்டுப்பாடுகளை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பெரும்பாலானோர் வெடித்தனர். இதனால் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் பட்டாசு வெடித்தால் சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு மோசம் என்கிற நிலைக்கு சென்றுள்ளது.

தற்போது சென்னை நகரில் காற்று மாசுபாட்டின் அளவில் 100 முதல் 150 என்கிற அளவில் உள்ளது. இது மோசமான அளவாகும். குறிப்பாக பெருங்குடி, அரும்பாக்கம் மண்டலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசு அதிகரிப்பால் பக்கவாதம், மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோய் போன்றவை வர வாய்ப்புள்ளது. இது சென்னையில் வசிக்கும் மக்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |