நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. மறுபக்கம் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க 2 முறை தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்றும், சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும் என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.