Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உஷார்…! புத்தாண்டு கொண்டாட்டம்: கடும் எச்சரிக்கை…!!!

சென்னையில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக, புத்தாண்டு கொண்டாடத்திற்கு சென்னையில் காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் மக்கள் ஒன்று கூடி புதுவருட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஓட்டல்கள் தங்கும் வசதி உணவு விடுதிகளில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, காய்ச்சல் ஏற்பட்டு மக்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டங்கள் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |