Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே உஷார்…. மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்…. கவனமா இருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த வாரம் முழுவதும் கன மழை இடைவிடாது வெளுத்து வாங்கியது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக ஓரளவு வெயில் எட்டிப் பார்த்துள்ளது. சென்னையில் அடிக்கடி கிளைமேட் மாறுவதால், காய்ச்சல், வயிற்று வலி மற்றும் சுவாச பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இந்த பிரச்சனைகளை கூறிக் கொண்டு மருத்துவமனைக்கு அதிக அளவு மக்கள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு சற்று கடுமையாக இருப்பதாகவும், அவர்களை கட்டாயம் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்கும் அளவிற்கு மோசமான நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் மற்றும் வயிற்று உபாதைகள் தொடர்பாக சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டயரியா எனப்படும் வயிற்றுப்போக்கு பிரச்சனையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

காய்ச்சல், இறுமல், தலைவலி, உடல் வலி, வயிற்றுப் போக்கு, வயிற்று வலி போன்றவை அதிகம் காணப்படுகிறது. சிலருக்கு சுவாசப் பாதை தொற்று பிரச்சினை ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். பயப்படும் அளவுக்கு நிலைமை இல்லை என்றாலும் கூட வயிற்றுப் போக்கு அல்லது காய்ச்சல் வந்தால் மக்கள் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும், தாமதிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அருகாமை மாநிலங்களில் வைரஸ் பரவல் இருப்பதால் நாம் கவனமாக இருப்பது அவசியம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Categories

Tech |