Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே உஷார்… மாநகராட்சி அதிர்ச்சி தரும் அறிவிப்பு….!!!!

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் 1, 106 ஆக அதிகரித்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாகப் பரவிவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 10-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் அதிகரித்துள்ளது. முன்னதாக 600 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது 1, 106 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மூன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்படுகிறது. அந்தவகையில், வில்லிவாக்கம், வசந்தம் காலணி, சூளைமேடு உள்பட மொத்தம் சென்னையில் 1, 106 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 173 தெருக்களும்,  தேனாம்பேட்டை மண்டலத்தில் 146 தெருக்களும் கட்டுப்பாடுப் பகுதிகளாக அறிவிக்கப்ட்டுள்ளது. குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 8 தெருக்கள் கட்டுப்பாட்டு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.  .

Categories

Tech |