Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உஷார்!…. மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?….!!!!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சென்ற 2 வருடங்களாக ஆட்டிப்படைத்து வந்தது. அத்துடன் பல லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு, ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு என பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் உருவாகியது. இதையடுத்து தீவிர கட்டுப்பாடுகள், தடுப்பூசி ஆகிய நடவடிக்கைகளால் இயல்புநிலை திரும்பியது. நடப்பு ஆண்டு தொடக்கத்திலிருந்து கொரோனா நிலைமை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி தமிழகத்தில் ஆங்காங்கே பாதிப்புகள் ஏற்பட்டு இப்போது ஆயிரத்தை தாண்டிவிட்டது. நேற்று மாலை நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது 1,938 ஆகும்.

மொத்த இறப்புகள் 38,026ஆக இருக்கிறது. நேற்றையதினம் 14,212 நபர்களுக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் 169 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அவர் தஞ்சையை சேர்ந்தவர் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் வாயிலாக தெரியவந்துள்ளது. மாநிலத்திலேயே அதிகபட்சம் சென்னையில் 984 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையில் நேற்று மட்டும் புதியதாக 221 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இருப்பினும் 101 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். அதனை தொடர்ந்து செங்கல்பட்டில் 95, கோவையில் 26 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. ஆகவே பிற மாவட்டங்களை காட்டிலும் சென்னைதான் அதிககவனம் செலுத்த வேண்டிய மாவட்டமாக உள்ளது. இதனையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பாகவும், மாநில அரசு சார்பிலும் பல நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையிலும் அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு போன்ற 4 மண்டலங்களில் தொற்று அதிகமாக காணப்படுகிறது.

சென்னையில் ஒரு வட்டாரத்திற்கு ஒருஇடம் என மொத்தம் 3 இடங்களில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது இங்கு 50 படுக்கைகளுடன் கூடிய சிறப்புவசதிகளானது செய்யப்படவுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சென்னையில் முதல் தவணை தடுப்பூசியை 94.36 சதவீதம் பேரும், 2ஆம் தவணை தடுப்பூசியை 85.51 சதவீதம் பேரும் போட்டுக்கொண்டனர். மீதமுள்ளவர்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் மெகா தடுப்பூசி முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |