தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஜிகா வைரஸ் பரவாமல் இருக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி சென்னையில் தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் வளர்வது கண்டறியப்பட்டால் 100 ரூபாய் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வீடுகளுக்கு 200 ரூபாய் வரை, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 15,000 வரை, கடைகளுக்கு 5 ஆயிரம், உணவகங்களுக்கு 25 ஆயிரம், நட்சத்திர ஹோட்டல், தொழிற்சாலைகளுக்கு 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.