Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க… அலர்ட்…!!!

சென்னையை தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் பெருமளவு பாதிக்கப்பட்டன. அப்போது தொடர்ந்து பெய்த கனமழையால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. அதன் பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.

நேற்று சிறிது நேரம் மட்டும் மழை பெய்யாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கும் நிலையில், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், பெருங்களத்தூர், கிண்டி மற்றும் வண்டலூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |