Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே… ஏப்ரல் 15 வரை மட்டுமே… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது வங்கி வட்டி மற்றும் சொத்து வரி உள்ளிட்ட பலவற்றை இருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சியில் 12.86 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தக் கூடியவர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டிற்கான சொத்து வரியை செலுத்த ஏப்ரல் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 16ஆம் தேதி முதல் 2 சதவீதம் அபராதத்துடன் சொத்து வரி வசூலிக்கப்படும். மேலும் சொத்து வரி முறையாக செலுத்தினால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |