Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. காற்று மாசு குறைந்தது…. மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் கடந்த வருடம் காற்று மாசு குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை நகரமயமாக்கல் மற்றும் தொழில் மயமாக்கல் காரணமாக மக்கள் தொகை தனிநபர் வாகன பயன்பாடு அதிகரித்ததால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை முயற்சியால் காற்றின் தரம் கணிசமாக மேம்பட்டது. இந்தியாவின் ஆறு பெரு நகரங்களை ஒப்பிடுகையில் சென்னையில் காற்றின் தரம் மிகவும் தற்போது குறைந்துள்ளது. தொழிற்சாலைகளில் காற்று மாசு குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஏதாவது பாதிப்பு இருந்தால் உடனே சரி செய்யப்படும். கட்டுமான இடங்களிலும் தூசி நுண் துகள்கள் படர்வதை தடுக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பாக மியா வாக்கி காடுகள்,போக்குவரத்து சாலை சுத்தப்படுத்துதல் மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கு தனி பாதை என பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டங்கள் காரணமாகவே சென்னையில் தற்போது காற்று மாசு குறைந்துள்ளதாக மாநகராட்சி தலைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |