Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…. கொரோனா அவசர தேவைக்கு இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிடையாது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் மக்களுக்கு குரான் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்காக தகவல்தொடர்பு மையங்களை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது. அதன்படி மக்கள் கொரோனா அவசர தேவைக்காக 044-46122300 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Categories

Tech |