Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…. தடுப்பூசி கையிருப்பு நிலை குறித்து அறிய…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வில்லை. அதுகுறித்து முன்னறிவிப்பு இல்லாததால் பொதுமக்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அதன்படி சென்னையில் கடந்த 5 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவில்லை. இதையடுத்து சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு நிலை குறித்த தகவல்களை covid19.chennaicorporation.gov.in/covid/vaccine_ என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Categories

Tech |