Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…..! “நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை”….. உடனே கிளம்புங்க….!!!!

சென்னையில் நாளை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் முகாம் நடைபெற உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இதற்கான பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் சென்னையில் 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் நாளை அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே இணையதளம் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்த போது படிவம் 6 பி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் கைபேசி விவரங்களை வழங்கியவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |