வாக்காளர் அட்டையோடு ஆதார் எண்ணை இணைக்கும் திட்டமானது கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை 26 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் படி தமிழக தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையோடு ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வீடு வீடாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலானவர்கள் வாக்காளர் எண்ணுடன் ஆதாரை இணைக்காமல் இருப்பதால் நாளை மறுநாள் சென்னையில் சிறப்பு முகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடக்கிறது. பொது மக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநில தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.